உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணி மும்முரம்

திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணி மும்முரம்

பழநி: பழநி திருஆவினன்குடிகோயில், கும்பாபிஷேகப்பணியில், வெளிப்பிரகாரம் முழுவதும், மேற்கூரை அமைக்கப்படுகிறது. பழநி திருஆவினன்குடி கோயிலில் 90 லட்ச ரூபாய் செலவில், கும்பாபிஷேக பணிகள் பல மாதங்களாக நடந்துவருகிறது. கும்பாபிஷேக பணியில், முதல்கட்டப்பணியாக, சேதமடைந்துள்ள கோபுரங்களில் உள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்படுகிறது. மயில் மண்டபத்தை சுற்றி, 16 லட்ச ரூபாய் செலவில் கிரணைட் கற்கள் பதிக்கப்பட்டுஉள்ளது. தற்போது, வெளிப்பிரகாரத்தில் 4.5 லட்ச ரூபாய் செலவில், மேற்கூரை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் கும்பாபிஷேக பணிகளை வேகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் முடிந்துவிடும். விரைவில் குடமுழுக்கு விழா நடக்கவுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !