சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4270 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்திற்குட்பட்ட நாகவள்ளி, நாகராஜர், சித்திவிநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, இரண்டாம் கால யாகபூஜை முடிந்து, காலை 8 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்து, கும்பாபிஷேகத்தை கோபிநாத்சர்மா நடத்தி வைத்தார். டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.