திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 18 திருமணங்கள்!
ADDED :4271 days ago
திருப்போரூர் : திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், முகூர்த்த நாளான நேற்று, 18 திருமணங்கள் நடந்தன.பிரார்த்தனை திருமணங்கள், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நடந்து வருகிறது. நேற்று, தை மாதத்தின் சுபமுகூர்த்த நாள் என்பதால், திருப்போரூரில் உள்ள, 10 திருமண மண்டபங்களிலும் திருமணம் நடந்தது. இது தவிர கோவிலில், 18 பதிவுத் திருமணங்களும், 46 காது குத்தலும் நடந்தது. இதனால், கோவில் வளாகம், மாடவீதி பகுதிகள் வாகனங்களுடன் கூட்டம் நிறைந்து நெரிசலாய் காணப்பட்டது.