உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கர்கோயில் கும்பாபிஷேகம்: ராஜபாளையத்தில் பிப்., 9ல் நடக்கிறது

சொக்கர்கோயில் கும்பாபிஷேகம்: ராஜபாளையத்தில் பிப்., 9ல் நடக்கிறது

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோடு சொக்கர்கோயிலில், 1.5கோடி ரூபாயில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு, பிப்ரவரி 9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா கூறுகையில், ""கோயில் அமைந்து உள்ள இடம், பல ஆண்டுகளுக்கு முன் மணல்மேடாக இருந்தது. அங்கு, தோண்டும்போது சிவலிங்கம் மற்றும் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., விடம் ஒப்படைத்து, அரசு அனுமதியுடன் கோயில் கட்டப்பட்டது. 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது. பின் 2001ல் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தினார். கோயிலில் கொடிமரம் இருப்பதால், ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தற்போது, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய கவசம், முருகன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டு உள்ளது. மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வர சுவாமிக்கு, தங்க முலாம் பூசிய கவசம் செய்யப்பட்டு உள்ளது. இது தான், இந்த ஆண்டு திருப்பணி. மேலும் ஏற்கனவே இருந்த பைரவர், துர்க்கை சிலைகளை மாற்றி, புதிதாக பிரதிஷ்டை செய்து உள்ளோம். திருப்பணியை 1.5 கோடி ரூபாயில் செய்து உள்ளோம். இதற்கான நிதியுதவி ,எங்கள் குடும்பத்தினர் மற்றும் கம்பெனியினர் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு முன், கோயில் அருகே திருமண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. பிப்ரவரி 9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான விழா பிப். ,6ல் துவங்குகிறது.60 ஆச்சாரியார்கள் வர உள்ளனர். பிச்சை குருக்கள் கும்பாபிஷேகம் நடத்துகிறார். தயானந்த சரஸ்வதி, தருமபுர ஆதீனம் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !