உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகூர் கிராமத்தில் திருத்தணி முருகர் வீதியுலா

அகூர் கிராமத்தில் திருத்தணி முருகர் வீதியுலா

அகூர்: திருத்தணி முருக பெருமான், அகூர் கிராமத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், காலை, 8:30 மணிக்கு மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணிக்கு வந்து, அங்கிருந்து, மாட்டு வண்டியில், மேல்திருத்தணி, கசவராஜபேட்டை, முருகூர் வழியாக அகூர் கிராமத்திற்கு மாலை, 3:00 மணிக்கு சென்றுஅடைந்தார். அங்குள்ள, ஈஸ்வரன் கோவிலில், உற்சவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அகூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் கேரள கெண்டா மேளம் முழங்க, முருக பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 11:30 மணிக்கு, மலைக் கோவிலுக்கு உற்சவ பெருமான் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !