உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் நிறைவு!

வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் நிறைவு!

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, நேற்று, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 25ம் தேதி துவங்கி, தொடர்ந்து, ௧௦ நாட்கள் நடைபெற்றன. தினமும் காலை, மாலையில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு, உற்சவர் ஆள்மேல் பல்லக்கில் பவனி வந்தார். காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஹிருத்தாப நாசினி குளத்தில் புனித நீராடினர். நேற்று காலை, 11:00 மணிக்கு த்வாதச ஆராதனம் நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து, இரவு 10:30 மணிக்கு கொடியிறக்கத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !