யமுனாம்பாள் கோவிலில் யாகசாலை பணிகள் துவக்கம்!
திருவாரூர்: நீடாமங்கலம் யமுனாம்பாள்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜை துவங்கியது. தஞ்சையை 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சரபோஜி தன் மனைவி யமுனாம்பாயுடன் திருவிசை நல்லூரில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடேச ஐய்யாவால் சுவாமியிடம் ராமநாம ஜப தீட்சை பெற்று சதார்வ காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தனர். ராம நாமத்தை ஜபித்து வந்த மகாராணி யமுனாபாய் என்கிற யமுனாம்பாள் நிறைமாத கற்பினியாக இருக்கும்போது அவர்களுக்கு சொந்தமான தோட் டத்தில் இருந்த மாமரத்தில் மெய்பொருளாம் இறைவனை தனக்கு உறுது ணையாக எண்ணி அம்மெய்பொருளோடு, மாரத்தில் இரண்டரக் கலந்து விட்டார். அவர்களின் வழியில் வந்த மராட்டிய மன்னர்கள் அந்த மாரத்தையே இறை வனாக நினைத்து வழிபட்டு தங்கள் வம்சத்தின் புத்திரதோஷம் நீங்கப் பெற்றனர்.
மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாவசிம்ம மகாராஜா காலத்தில் அன் னை யமுனாம்மாள் பெயரில் சத்திரம் ஒன்று நிறுவி அனைவருக்கும் அனை த்து வித தர்மங்களும் செய்து வந்தனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சந்தானராமரை பற்றி பாடும் போது யமுனாம்புரி நீ வசந்தம் என்றுபாடியுள்ளார். காலப் போக்கில் இவ்வூர் நீடாமங்கலமாக மறுவியுள்ளது. அதன் பின் நகர வாசிகள் மாமரத்திற்கு முன்பாக ஒரு கோவில் அமைத்து ஒரு கையில் படியுடன் கூடிய அம்பாள் விக்ரகத்தை அமைத்து வழிபட்டு வந்தனர். 1972ம் ஆண்டு இயற்கை சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்தது. அத னை அப்பகுதி மக்கள் அன்னை யமுனாம்பாள் இறைநிலையோடு மீதம் இருந்த மாமரத்தை செப்பு கவசம் இட்டு இன்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்று 3ம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்யபம், ஆச்சார்யவர் ணம், கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. இன்று 4ம் யாக சாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 5 தேதி பல்வேறு பூஜையைத் தொடர்ந்து 6ம்தேதி காலை 9.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.