மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4266 days ago
மகுடஞ்சாவடி: மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கடந்த 1ம்தேதி கூடலூர் முத்து முனியப்பன் கோவிலில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து காசி, ராமேஸ்வரம், பவானி, சித்தர் கோவில் புனித தீர்த்தங்கள் மற்றும் பாலிகைகளையும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர். மாலை யாக பூஜையும், இரவு கலசம் வைத்தலும் நடந்தது. தொடர்ந்து நேற்று மகுடேஸ்வரர் சாமி பரிவாரமூர்த்திகள் மற்றும் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.