உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா!

காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா!

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவி லில், பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. வரும் 17ம் தேதி வரை நடைபெறும் இவ் விழாவில், தினமும் நித்ய கல்யாணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. நேற்று காலை 11.00 மணிக்கு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, நித்ய கல்யாணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !