பழநியில் தைப்பூச தேருக்கு கண்ணாடி கூண்டு பாதுகாப்பு!
பழநி: தைப்பூச விழா நடக்கும் பழநி பெரியநாயகியம்மன் கோயில் தேருக்கு, கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைப்பூச விழா ஆண்டுதோறும் நடைபெறும். இதில் தேரோட்டம் பிரசித்திபெற்றது. இந்த தேர் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வைக்காகவும், தூசி படாமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போல, 4.90 லட்ச ரூபாய் செலவில், "ஸ்டீல் மற்றும் "பைபர் கண்ணாடிகளால் 20 அடி உயரத்திற்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மதுரையைத் தொடர்ந்து, பழநி பெரியநாயகியம்மன் கோயில் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேரை தூய்மைசெய்வதற்கும், பராமரிப்பு பணிக்கு உள்ளே செல்ல ஏதுவாக, தனியாக கதவுகள் பொருத்தப் பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான சேதமடையாத "பைபர் கண்ணாடி மற்றும் "ஸ்டீல் கொண்டு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.