மாசாணியம்மன் குண்டம் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். வால்பாறை டி.எஸ்.பி சக்திவேல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது: மாசாணியம்மன் குண்டம் திருவிழா அன்று பல்லாயிரக்கணக்காணபெண் பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவர் . அவர்களின் பாதுகாப்பிற்காக இம்முறை கூடுதல் பெண் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். இம்முறை அன்னதானத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதியளித்துள்ள இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும். ரோட்டில் ஆட்டோ, வேன்களில் நிறுத்தி அன்னதானம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இம்முறை மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சிசி டிவி கேமராவின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் . காவல் உதவி மையம் அமைக்கபட்டு பக்தர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.