உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவம், வைணவம் புத்தொளி பயிற்சி

சைவம், வைணவம் புத்தொளி பயிற்சி

திருவாரூர்: தமிழக அரசின் உத்திரவுக்கேற்ப இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சைவம் மற்றும் வைணவம் குறித்து சிவச்சாரியார் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் தேவாசிரியர் மண்டபத்தில் நடந்தது. கோவில் செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை வகித்தார். பயிற்சி முகாமை அறநிலைய துறையின் உதவி ஆணையர் சிவராம்குமார் துவக்கி வைத்து பேசியதாவது: ஆறு வார காலத்திற்கு தினந்தோறும் மதியம் 2 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் புலவர்கள் மூலம் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தம், திவ்ய பிரபந்தம், சிற்பசாஸ்திரம் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.50ம், பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இந்த பயிற்சி வகுப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்டு சிவாச்சாரியர்கள் மற்றும் பட்டாச்சாரியர்கள் பயன்பெறலாம். இவ்வாறு உதவி ஆணையர் பேசினார். இந்த பயிற்சி வகுப்பில் மாவட்டம் முழுவதும் இருந்து 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !