பூமனூர் பெரியநாயகி திருத்தல தேர்பவனி
மேட்டூர்: பிரசித்தி பெற்ற பூமனூர் பெரியநாயகி திருத்தல தேர்பவனி, நேற்று மாலை நடந்தது. கொளத்தூர் அடுத்த, பூமனூர் பெரியநாயகி திருத்தல பெருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை, 11 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. மதியம், 12 மணிக்கு, நோயாளிகளுக்கான சிறப்பு நற்கருணை ஆராதனை செபவழிபாடு நடந்தது. நேற்று மாலை, 5 மணிக்கு பெரியநாயகி அன்னை தேர்பவனி நடந்தது. இதில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, 9 மணிக்கு, செபவழிபாடு, 11 மணிக்கு நன்றி திருப்பலி, மதியம், 12 மணிக்கு, வேண்டுதல் தேர்பவனி, மதியம், 1 மணிக்கு கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சவேரியார் பாளையம், பூமனூர் திருத்தல வளர்ச்சிகுழு மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.