ஜெயின் கோவில் திருவிழா: ஊட்டியில் பக்தி ஊர்வலம்
ADDED :4262 days ago
ஊட்டி: ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில், சுவாமி ஸ்ரீ விஜய் சாந்தி சுரீஸ்வர்ஜியின் 124வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை ஜெயின் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை, பஜனை நடந்தது. தொடர்ந்து கோவிலில் துவங்கிய ஊர்வலம் லோயர் பஜார், மெயின் பஜார், மார்க்கெட் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. அகிம்சை உபதேசம் மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஊட்டி மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஜெயின் மக்கள் பங்கேற்று, பஜனை பாடல்களை பாடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.