உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன்கோயிலில் கும்பாபிஷேகம்

பத்திரகாளி அம்மன்கோயிலில் கும்பாபிஷேகம்

நாகர்கோவில் : கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பிப்ரவரி 12-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு 10-ம் தேதி காலை பள்ளியுணர்த்தல், நிர்மால்ய பூஜை, உச்சபூஜை மாலை ஸ்தல சுத்தி, புண்ணியாகம், தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்டவை நடக்கின்றன. 11-ம் தேதி காலை பள்ளியுணர்த்தல், நிர்மால்யபூஜை. அபிஷேகம், மஹா கணபதிஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், ஜிவகலச பூஜைகள், உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலை தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்டவை நடக்கிறது. இதி ல் சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து மதியம் அன்னதானம், மாலை தீபாராதனை, அத்தாழபூஜை, ஆகியவை நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக வருகிற ஏப்ரல் 2-ல் நடக்கும் தூக்க நேர்ச்சைக்கான பெயர் பதிவும் அன்றைய தினம் முதல் துவங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !