உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயிலில் கும்பாபிஷேகம்!

42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயிலில் கும்பாபிஷேகம்!

ஆம்பூர்: இடிக்கப்படாமல் 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயில் கோபுரம் புதிய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் திருப்பணி குழுவினர் முடிவு செய்துள்ளனர். அய்யனூர் கிராமத்தில் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதுகுறித்து கோயில் திருப்பணிக்குழு தலைவர்கூறுகையில், கடந்த ஒரு மாதமாக நடந்த பணி திருப்தியாக நல்ல முறையில் முடிந்துள்ளது. கோயில் கோபுரத்தை சரியான திசையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடித்தள பகுதியை பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது. விரைவில் பக்தர்களின் ஆதரவுடன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !