உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் யானைகள் முகாம் நிறைவு!

கோயில் யானைகள் முகாம் நிறைவு!

மேட்டுப்பாளையம்:  நவ.19ல் தமிழக அரசு தொடங்கிய கோயில் மற்றும் வனத்துறை யானைகள் முகாம் நேற்று முடிவடைந்தது. பவானி ஆற்றில் குளிக்க வைக்கப்பட்ட யானைகள், பாகன்களால் முகாமிடத்தில் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூரபாண்டியன் முன்னிலையில் யானைகளுக்கு மாலை மரியாதையுடன் பூஜைகள் நடத்தப்பட்டன. அறநிலையத்துறை அமைச்சர் கொடியசைக்க கோயில் யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு வழியனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !