திருப்பரங்குன்றம் கோயிலில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை!
ADDED :4518 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா 6ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது.கோயிலில் ஜன.,31ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில், தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருகிறார். ஆறாம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பல்லக்கில் திருஞான சம்பந்தரும் எழுந்தருளினார். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டன.