உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கதிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை: ஆனைமலை அருகே கோட்டூர் மலையாண்டி பட்டணம் பகுதியில் பிப்ரவரி மாதம் 12ம் தேதி காலை 9.45 மணிக்கு ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி ஸ்ரீ கதிராயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி வரும் 10ம் தேதி காலை 9.00 மணிக்கு வாஸ்து பூஜையுடன் முதற்கால யாக பூஜை நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. வரும் 12ம் தேதி காலை 9.45க்கு கதிராயப் பெருமாள், ஆஞ்சநேயர் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை ஒன்பது மணிமுதல் மகா அன்னதானம் நடைபெறுகிறது. காலை 10:15 மணிக்கு எல்லா மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், காலை 11.00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி ஸ்ரீ கதிராயப் பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், தீபாராதனையும், மாலை 5.00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !