உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா

புதுச்சேரி: அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், குரு பூஜை விழா நேற்று நடந்தது. வீமகவுண்டன்பாளையத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு அகவல் பாராயணம், 9:00 மணிக்கு திருவிளக்கு, புனிதநீர், ஆன் ஐந்து, ஐங்கரன் வழிபாடுகள் நடந்தது. அதைத் தொடர்ந்து, வேள்வி வழிபாடு, திருமஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டும், பகல் 12:50 மணிக்கு பேரோளி வழிபாடு நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வாரியத் தலைவர்கள், என்.ஆர். காங்., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !