உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடைபெற்றது.  5.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து, சுவாமி, அம்பாள், விநாயகர் சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுரங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !