நவக்கிரக தம்பதியர்கள் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4311 days ago
மண்டைக்காடு: நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக தம்பதியர்கள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் அபிஷேகம், தீபாராதனை, நவக்கிரகங்களுக்கு உஷபூஜை, கலச அலங்கார பிரதட்சணம் நடந்தது. தொடர்ந்து சிவசக்தி அம்மன் கோவிலில் இருந்து கலச நீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.