மதுரை கூடலழகர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றம்!
ADDED :4262 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.30 மணிக்கு கொடியேற்ற பூஜைகள் தொடங்கி மேஷ லக்னத்தில் காலை 10.30 மணிக்கு கொடியோற்றப்பட்டது. இரவில் சுவாமி அன்னவாகனத்தில் ராஜாங்க சேவையில் மாட வீதியில் அருள்பாலித்தார். வரும் 15ம் தேதி காலை அலங்கார திருமஞ்சனமும், மாலையில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.