திண்டுக்கல் செல்லாண்டியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா!
ADDED :4311 days ago
திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா 4ம்தேதி தொடங்கி 12ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பூக்காணிக்கையுடன் ஊர்வலமாக வந்தனர்.