உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

சென்னை: கொளத்தூரில் அமுதாம்பிகை உடனுறை சோமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கான கும்பாபிஷேக திருப்பணி முடிந்த நிலையில் கடந்த ஜன 31ம்தேதி காலை 8 மணிக்கு கிராமதேவதை வழிபாட்டுடன் கும்பாபிஷேக திருவிழா ஆரம்பமானது. இன்று காலை 5.30 மணிக்கு 6வது காலயாக பூஜை ஆரம்பம், 7.30 மணிக்கு பரிவார யாகசாலை பூர்ணாஹுதி, 8.30 மணிக்கு ப்ரதான யாக சாலையில் மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு. 9.15-9.30 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், 9.45-10.30 மணிக்குள் விநாயகர், சோமநாதீஸ்வரர், அமுதாம்பிகை மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து, 11.00 மணிக்கு மஹாபிஷேகம், 12.00 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 7.30-9.00 மணிக்குள் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் விஷேச வாத்தியங்கள் மற்றும் வானவேடிக்கையுடன் ரிஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் பக்தகோடிகள், உபயதாரர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !