உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மகரவாகன உற்சவம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மகரவாகன உற்சவம்

காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோவிலில், மகரவாகன உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. இதில், இரண்டாம் நாளான இன்று மகரவாகன உற்சவம் நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு, உற்சவர் காமாட்சியம்மன் மகரவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடந்தது. மாலை சந்திரபிரபை உற்சவம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !