செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4266 days ago
திருப்பூர்: செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் காங்கயம் சாலை செல்வவிநாயகர் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவூட்டப்பட்டன. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு கோவில் திருப்பணிக் குழுவினர் முன்னிலையில், வேதமந்திரங்கள் முழங்க நேற்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.