உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவிலில் கண்ணாடி பேழையில் அரிசி!

சிவன்மலை கோவிலில் கண்ணாடி பேழையில் அரிசி!

திருப்பூர்: காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் "ஆண்டவன் கட்டளை கண்ணாடி பேழையில் அரிசி வைக்கப்பட்டது. காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கண்ணாடி பேழை உள்ளது. கனவில், சுவாமி கூறும் பொருட்களை, கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வருவர். அதுகுறித்து சுவாமியிடம் பூ போட்டு, அனுமதி கேட்கப்படும். அனுமதி கிடைத்ததும். அந்த பொருள் பேழையில் வைக்க அனுமதிக்கப்படும். பேழையில் தண்ணீர் வைத்தபோது, சுனாமி; மணல் வைத்தபோது, மணல் விற்பனையில் பிரச்னை; மஞ்சள் வைத்தபோது மஞ்சளில் ஏற்பட்ட விலை ஏற்றம் என, அத்தகைய பொருள் சம்பந்தமாக ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிப்பட்டி அருகே உள்ள முடிகணம் என்ற பகுதியைச் சேர்ந்த என்.எஸ்.பார்த்திபன் என்ற பக்தரின் கனவில் இந்த உத்தரவுப் பொருள் வந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவரது விபரக் குறிப்பும், கண்ணாடிப் பெட்டியின் கீழே வழக்கம்போல எழுதி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !