வரசித்தி விநாயகர் கோவில் மஹாகும்பாபிஷேகம்!
ADDED :4267 days ago
சேத்துப்பட்டு: கருணாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, மஹாசங்கல்பம், தனபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று 9.45க்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.