உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்

திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்

திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் நடைபெற்ற 108 பால்குட அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காக்களூர் சாலையில் அமைந்துள்ள வேம்புலி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு தை மாதத்துக்கான பால்குட அபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.  இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றன.  இதில் பெண் பக்தர்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த விழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !