ஆறுமுகனேரி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4289 days ago
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பிப். 5ஆம் தேதி காலையில் நடைபெற்ற மகா கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து பிரம்மசாரி பூஜை, கஜபூஜை, பூர்ணாஹுதி, நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.பின்னர், கோபுர விமான கலச ஸ்தாபனம் நடைபெற்றது. அன்று மாலையில் வாஸ்து சாந்தி, சாந்தி ஹோமம், திசா ஹோமம், பிரவேசபலி, ரஹோக்ன ஹோமம், தீர்த்த சங்கிரணம், மிருத் சங்கிரணம் ஆகியவை நடைபெற்றன.பிப். 6நீஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) 6-ஆம் கால யாகசாலை பூஜையும், 11.45-க்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.