தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு சுற்று வந்த சுவாமியும், தெய்வானையும்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பக்குளத்தில், தண்ணீர் பற்றாக்குறையால், தெப்பம், காலை, மாலையில் தலா ஒரு சுற்று மட்டுமே சுற்றி தெப்பத் திருவிழா நடந்தது. ஜி.எஸ்.டி., ரோட்டில் தெப்பக்குள தண்ணீரில், மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பக்குளம் வறண்டதால், அருகிலுள்ள ஆழ் குழாயிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்டது. அப்படியும், தெப்பக்குளம் நிரம்பவில்லை. இருக்கின்ற தண்ணீரில் தெப்பம் அமைக்கப்பட்டு, நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். வழக்கமாக காலையில் மூன்று முறையும், இரவில் மைய மண்டத்தில் சுவாமி ஊஞ்சலாட்டம் நிகழ்ச்சி முடிந்து, மூன்று முறையும் தெப்பம் சுற்றிவரும். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால், சற்று சிறிய தெப்பமாக அமைத்து, ஆட்களை ஏற்றுவதை தவிர்த்ததுடன், காலை, இரவு தலா ஒரு சுற்று மட்டுமே தெப்பம் சுற்றி வந்தது.சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு, சுப்பிரமணிய சுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை முடிந்து அருள்பாலித்தார்.