உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருஷாபிஷேக திருமஞ்சன விழா

வருஷாபிஷேக திருமஞ்சன விழா

மதுரை: மதுரை அயிலாங்குடி, ஸ்ரீ லட்சுமி வராகப் பெருமாள் கோயிலின், வருஷாபிஷேக விழா, இன்று (பிப்.,10) பகல் 12 முதல் 12.30 மணிக்கு நடக்கிறது.இதையொட்டி, இன்று காலை 7.15 மணிக்கு, வருஷாபிஷேக ஹோமம் துவங்குகிறது. பகல் 12 மணிக்கு, லட்சுமி வராகப் பெருமாளுக்கு திருமஞ்சனமும், பெங்களூரு நித்யா கிருஷ்ணன் குழுவினரின் கச்சேரியும் நடக்கிறது. நேற்று நடந்த பாட்டு போட்டியில், வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு நெரூர் வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர சீத்தாராமன் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை, மேனேஜிங் டிரஸ்டி சேஷாத்ரி, ஸ்ரீநிவாசன், கிருஷ்ணமூர்த்தி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !