புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன்கோவில் திருப்பணி துவக்கம்
ADDED :4291 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திருப்பணியை சபாநாயகர் சபாபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.முருங்கப்பாக்கத்தில் திரவுபதியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சந்துவெளி மாரியம்மன் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.இக்கோவில்களுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபி?ஷக பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பணியை சபாநாயகர் சபாபதி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், திருப்பணிக்குழுவினர், அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.