திருத்தணி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4291 days ago
திருத்தணி : கமல விநாயகர் கோவில், கும்பாபிஷேகம், வரும், 12ம் தேதி நடக்கிறது. திருத்தணி, அக்கைய்யா சாலையில் உள்ள கமல விநாயகர் கோவிலின், திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் வரும்,12ம் தேதி காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. 18 கலசங்களுடன் கணபதி ஹோமம், நாளை துவங்குகிறது. தொடர்ந்து, 12ம் தேதி காலை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் உற்சவர் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.