கலிகம்ப நாயனார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4291 days ago
பெண்ணாடம் : பெண்ணாடம் கலிகம்ப நாயனார் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கலிகம்ப நாயனார் அவதரித்த பெண்ணாடத்தில், கலிகம்ப நாயனாருக்கு புதிதாக மடாலயம் கட்டப்பட்டு, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, 7ம் தேதி வாஸ்துசாந்தி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கோபூஜை, இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, சுமங்கலி பூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.