யோகலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :4293 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், யோகலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளக்கரையில், யோகலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வீரஆஞ்ச நேயர், அனுமந்தீஸ்வரர் நவகிரக சன்னிதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6:00 மணி அளவில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை மற்றும் மாலை 6:00 மணி அளவில், யாக சாலை பூஜையும், பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற்றது. இன்று காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், காலை 9:00 மணி அளவில் கடம் புறப்படும் மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு மலர் அலங்காரமும் நடைபெற உள்ளது.