விநாயகர் கோவில்களில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :4293 days ago
திருப்போரூர்: திருப்போரூர் அருகே, மூன்று விநாயகர் கோவில் களில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருப்போரூர் மெயின் ரோடு வினைதீர்க்கும் விநாயகர் கோவில், மானாம்பதி கற்பக விநாயகர் கோவில், செம்பாக்கம் அச்சரவாக்கம் கிராமத்தில் உள்ள, கற்பக விநாயகர் கோவில் ஆகியவற்றில், அந்தந்த கிராமத்தினர் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 9:00 மணியளவில், மூன்று விநாயகர் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின.