உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலாப்பட்டு முருகன் கோவில் இன்று கும்பாபிேஷகம்

காலாப்பட்டு முருகன் கோவில் இன்று கும்பாபிேஷகம்

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவாரங்களுக்கான கும்பாபிேஷகம் இன்று (12ம் தேதி) காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜையுடன் துவங்குகிறது. 9:15 மணிக்கு மகா தீபாராதனை, 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் விநாயகர், பாலமுருகன், விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, வீர ஆஞ்சநேயர், வெங்கடாஜலபதி, துர்க்கையம்மன், மயிலம்மன், சூரியன், சந்திரன், பைரவர், இடும்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10:00 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு சமகால கும்பாபிேஷகமமும், 10:15 மணிக்கு மூலவர் பாலமுருகன், பரிவாரங்களுக்கு காஞ்சி ஜெயந்திரர், விஜயேந்திரர் முன்னிலையில் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 9:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !