பெண்ணாடம் ஐயப்பன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :4292 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் அக்ரகார தெரு, ஐயப்பன் சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, அனுக்ஞை, லட்சுமி, நவக்கிரக ஹோமம் பூஜை நடந்தன. மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு 7:00 மணிக்கு கலாகர்ஷணம், முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 10:00 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.