உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொட்டிக்குப்பம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

தொட்டிக்குப்பம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால பூஜை துவங்கியது. நேற்று காலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தையொட்டி காலை 5:30 மணிக்கு கோபூஜை, நான்காம் கால பூஜையுடன், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:10 மணிக்குள் கற்பக விநாயகர், மாரியம்மன், திரவுபதி அம்மன், காத்தவராயன், சுப்ரமணியர், நவக்கிரகம் மற்றும் மன்மதன் கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலவர்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !