உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை திருத்தேர் அலங்காரம் பணி தீவிரம்!

காரமடை திருத்தேர் அலங்காரம் பணி தீவிரம்!

மேட்டுப்பாளையம் : அரங்கநாதர் கோவில் தேர் அலங்காரப்பணி மற்றும் தேரை திருப்பும் குடில் கட்டைகளை செய்யும் பணியிலும், ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா வரும் 15ம் தேதி மாலை நடக்கிறது. இதற்காக, திருத்.ேதேர் அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், திருத்தேர் சீராக செல்லும் வகையில் “குடில்கட்டை” செதுக்கும் பணி நடந்து வருகிறது. நடராஜ், 68, கூறுகையில், நாங்கள் மூன்று தலைமுறையாக தேருக்கு தேவையான குடில் கட்டைகளை செய்து வருகிறோம். மரக்கட்டையில் சக்கரம் இருந்த போது, ஒவ்வொரு ஆண்டும், 15 முதல் 20 குடில் கட்டைகள் செய்வோம். இந்தாண்டு தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால்,வாகை, கருவேல மரத்தில் குடில் கட்டைகள் செய்கிறோம், என்றார். செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால் 45 குடில் கட்டைகள் செய்யப்பட உள்ளன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !