உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்.20ல் மாம்பழத்துறை பகவதி கோயில் கும்பாபிஷேகம்!

பிப்.20ல் மாம்பழத்துறை பகவதி கோயில் கும்பாபிஷேகம்!

ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு அருகிலுள்ள மாம்பழத்துறை பகவதி (புஷ்கலா தேவி) கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது. ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தொலைவிலுள்ள மாம்பழத்துறையில் புஷ்கலாதேவி, பகவதியாக பத்ரகாளி வடிவில் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் பிப்.20ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. டிச.3 முதல் 13 வரை பரிகார பூஜை ஹோமமும், டிச.14ல் கலசாபிஷேகம், களபாபிஷேகமும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. திருப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் 94435 67814ல் தொடர்பு கொள்ளலாம் என, ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜனசங்கம் சார்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !