திருச்செந்தூரில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :4294 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினார்கள். திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.