தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா!
ADDED :4294 days ago
ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தைத்தேர்த் திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். 8ம் நாள் விழாவான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பாடாகி உள் திருவீதி வலம் வந்து ரங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். மாலை 6.30 மணி வரை அங்கிருந்த நம்பெருமாள் பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி உள் திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளினார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.