சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் தீர்த்தவாரி!
ADDED :4294 days ago
சீர்காழி: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமிக்கு நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. செவ்வாய் பரிகார தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இங்கு கடந்த 2-ம் தேதி தை செவ்வாய் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தேரோட்டம் நிறைவுபெற்றது. நேற்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.