படேசாயுபு சித்தர் பீடத்தில் நாளை மகா குரு பூஜை
ADDED :4296 days ago
புதுச்சேரி: சின்னபாபுசமுத்திரத்தில், மகான் படேசாயுபு சித்தர் பீடத்தில் நாளை மகா குருபூஜை நடக்கிறது.கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தில் மகான் படேசாயுபு ஜீவசமாதி சித்தர்பீடம் உள்ளது. இந்த பீடத்தில், ஆண்டுதோறும் மகா குருபூஜை சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குருபூஜை, நாளை 14ம் தேதி நடக்கிறது. இதையொட்டி காலை 8.00 மணிக்கு மகானுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. பிற்பகல் 12.00 மணியளவில் மகான் திருஉருவப் படத்துடன் சித்தர் பீடத்தை வலம் வந்து கொடியேற்றி, தீபாராதனை நடக்கிறது. பிற்பகல் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.