12 ஆண்டுகளுக்கு பின் இரு கும்பாபிஷேகங்கள்!
கம்பம்: கம்பம், கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. ஒரே வளாகத்தில் பிரதான சன்னதிகள் சிவனுக்கும், பெருமாளுக்கும் இருப்பது அரிது. இந்த வளாகத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இந்த வளாகத்தில் உள்ள, காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் ஒரே வளாகத்தில் எழுந்தருளியுள்ள சிவன், பெருமாளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில், ரத உற்சவ கமிட்டி செயலாளர், உறுப்பினர்கள் ஓ.ஆர் நாராயணன், கே.ஆர். ஜெயப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் வாசு, நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்தவாசன், ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி தாளாளர் மகுடகாந்தன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் நாகராசன், பத்திர எழுத்தர் சக்திவேல். பி.பி.எஸ். குழும தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் இளங்கோவன், ம.தி.மு.க., நகர் செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஆர்.ஆர்.சி., நிர்வாக இயக்குநர் அசோக்குமார், நிலவள வங்கி துணைத் தலைவர் அறிவழகன், ஸ்ரீகுமார் ஹோட்டல் எஸ்.ராஜேந்திரன், ஜே.ஆர். டிராவல்ஸ் மாரியப்பன், ஆசிகா பேக்கர்ஸ் முருகன், ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.