வில்வநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :4285 days ago
ராணிப்பேட்டை: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோவிலில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. அப்போது அலங்கரிக்கப்பட்ட 3 திருத் தேர்களில் முறையே விநாயகர், தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர், மனோன்மணி சமேத சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து மாலை 6 மணியளவில் கோவில் நிலையை தேர்கள் வந்தடைந்தன.