சவுடாம்பிகை அம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்
அவிநாசி: சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் தீர்த்தக்குடங்கள் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.அவிநாசியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 66ம் ஆண்டு உற்வச பெருவிழா நேற்று துவங்கியது. காலை 6.30 மணிக்கு கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து மஞ்சள் ஆடை உடுத்திய பெண்கள், தீர்த்தக்குடங்கள் சுமந்து, கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். கோவிலில், சவுடாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலை சாமுண்டி அழைக்கப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று, சாவக்கட்டுப்பாளையம் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது. நாளை, அம்மனுக்கு அபிஷேகம், மாவிளக்கு, அலங்கார தீபாராதனை ஆகியனவும், மாலை சிம்ம வாகனத்தில்அம்மன் வீதியுலா காட்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தேவாங்க சமூக மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.